வாகாவுக்கு உதவிய வருணபகவான்

Bookmark and Share

வாகாவுக்கு உதவிய வருணபகவான்

அமலாபாலின் கணவர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் இது என்ன மாயம் படத்தில் நடித்து முடித்த விக்ரம் பிரபு, அப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் தற்போது வாகா என்ற படத்தில்லும் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜயபார்கவி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்குகிறார். டி.இமான் இசை அமைக்கும் இப்படத்துக்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். வாகா படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி பல கட்டங்களை எட்டியிருக்கிறது.

வாகா படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை வாகாவுக்கே சென்று படமாக்க திட்டமிட்டிருந்தனர். படத்தின் பட்ஜெட் இடம் கொடுக்காத காரணத்தினால் வாகாவில் எடுக்க வேண்டிய காட்சிகளை இங்கேயே எடுக்க திட்டமிட்டனர். கடைசியாக ஊட்டியில் எடுப்பது என தீர்மானித்து, தற்போது க்ளைமேக்ஸ் காட்சிக்காக ஊட்டியில் முகாமிட்டிருக்கிறது வாகா படக்குழு. கதைப்படி படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி மழையில் நடப்பதுபோல் உருவாக்க வேண்டுமாம்.

இதனால் செயற்கை மழைக்காக பல லாரிகளில் தண்ணீர் தயாராக வைத்திருந்தனராம். அதற்கு அவசியமே இல்லாமல்,  நிஜமாகவே மழை கொட்டித் தீர்த்துவிட்டதாம். நிஜ மழையிலேய படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.


Post your comment





Related News
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions