பாய்ந்துவந்த ரசிகர் குறித்து முதல்முறையாக பேசிய விக்ரம்!

Bookmark and Share

பாய்ந்துவந்த ரசிகர் குறித்து முதல்முறையாக பேசிய விக்ரம்!

பிரபல மலையாள தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா ஒன்றை நடத்தியது. இதில் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

மேடைக்கு கீழே அமர்ந்திருந்த விக்ரமை அவரது ரசிகர் சலாம் என்பவர், பாதுகாப்பை மீறி பாய்ந்தோடி வந்து கட்டித்தழுவினார். இதை சற்றும் எதிர்பார்க்காத பாதுகாவலர்கள் அந்த ரசிகரை விக்ரமிடம் இருந்து பிரித்து ஆவேசத்துடன் தள்ளினர்.

எனினும் ரசிகரின் இந்த செயலை நடிகர் விக்ரம் சாதாரணமாகவே எடுத்துகொண்டார். எனவே பாதுகாவலர்களை விலக்கிவிட்டு ரசிகருடன் நின்று அவரது விருப்பப்படி விக்ரம் போட்டோ எடுத்துகொண்டார். பின்னர் அந்த ரசிகர் ஆனந்தத்துடன் விக்ரமை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார்.

இணையத்தில் வெளியான இந்த வீடியோ வைரலாக பரவியதோடு மட்டுமல்லாமல் அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த சம்பவம் குறித்து தற்போது பேசியுள்ள விக்ரம்,

” எனக்குக் கிடைத்த வியத்தகு ரசிகர் சலாம். வேறு மாநிலத்தில் என் மீது அப்படியொரு அன்பைப் பகிர்ந்தது இதுவரை நான் அனுபவிக்காத ஓர் அற்புதத் தருணம்” என்று கூறியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions