விக்ரம் பாணியில் கதை பண்ணும் கெளதம்மேனன்!

Bookmark and Share

விக்ரம் பாணியில் கதை பண்ணும் கெளதம்மேனன்!

கெளதம்மேனனின் பேவரைட் ஹீரோவாக இருந்தவர் சூர்யா. காக்க காக்க, வாரணம் ஆயிரம் என ஹிட் படங்களை கொடுத்த அவர்கள், துருவநட்சத்திரம் படத்திலும் இணைய இருந்தனர்.

ஆனால், சிங்கம் படத்தில் நடித்திருந்த சூர்யா, அதே வேகத்தில் அதே ஆக்சனில் எனது அடுத்த படமும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொன்னவர், கெளதம் மேனன் சொன்ன கதையில் சிலபல திருத்தங்களை செய்யச்சொன்னார்.

ஆனால் அதற்கு முன்புவரை சூர்யாவிடம் கதையே சொல்லாமல் படம் பண்ணிய கெளதம்மேனன், தன்னிடம் அவர் துருவ நட்சத்திரம் கதையை துருவி துருவி கேட்டதால், டென்சனாகி விட்டார்.

இதுக்கு மேல கதையில் மாற்றம் செய்வதாக இல்லை என்று சற்று தூக்கலான குரலில் சொல்லி, அதற்கு மேல் அவரிடம் பேச விரும்பாமல், நண்பர்களாக இருந்தோம், நண்பர்களாகவே பிரிவோம் என்று கைகுலுக்கி விட்டு விடைகொடுத்தார்.  

விளைவு, அதையடுத்து அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கி வெற்றி பெற்ற கெளதம்மேனன், இப்போது சிம்புவைக்கொண்டு அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வருகிறார்.

ஆனால் இதையடுத்து அவர் விக்ரமை வைத்து ஒரு அதிரடி படத்தை இயக்கப்போகிறார். ஆனால், அந்த படம் அவர் ஏற்கனவே ரெடி பண்ணி வைத்திருக்கும் ஒரு கதையில் தயாராகயிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், அது விஜய்க்காக ரெடி பண்ணிய யோஹன் அத்தியாயம் ஒன்று கதையா? அல்லது சூர்யாவுக்காக ரெடி பண்ணிய துருவநட்சத்திரம் கதையா? என்பது தெரியவில்லை.

மேலும், ஏற்கனவே ரெடி பண்ணி வைத்திருக்கும் கதையிலேயே விக்ரமை நடிக்க வைத்தாலும், அவரது பாணிக்கேற்ப கதையில் நிறைய மாற்றம் செய்யவும் கெளதம்மேனன் முடிவு செய்திருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கிறார்கள்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions