விக்ரமின் இருமுகன் டீசரை ஒன்ஸ்மோர் கேட்ட சிரஞ்சீவி!

Bookmark and Share

விக்ரமின் இருமுகன் டீசரை ஒன்ஸ்மோர் கேட்ட சிரஞ்சீவி!

சீயான் விக்ரம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் “இருமுகன்” படத்தின் தெலுங்கு டைட்டில் மற்றும் டீசரை ஆந்திராவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி வெளியிட்டார்.

விக்ரம், நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேரும் இப்படத்திற்கு தெலுங்கில் “இன்கோகடு” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற, தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகங்களின் பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது வழங்கும் விழாவில் இன்கோகடு படத்தின் டீசரை வெளியிட்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பலத்த வரவேற்பால் மீண்டும் ஒருமுறை டீசரை ஒளிபரப்புமாறு கேட்டுக்கொண்டது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருமுகன் படத்தில் விக்ரம், நயன்தாரா உடன் நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகி வரும் இப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.

 


Post your comment





Related News
இருமுகன் புரமோஷனில் கேரளாவுடன் நெருக்கமான விக்ரம்!
இரு முகன் படத்தின் நீளம் எவ்வளவு?
இரு முகன் புது ரிலீஸ் தேதி வெளியானது!
தயாரிப்பாளரை புகழ்ந்த விக்ரம்!
24 பாணியில் விக்ரமின் இரு முகன்!
இரு முகன் பாடல் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விக்ரமின் இரு முகன் படத்தில் இத்தனை பாடல்களா?
அடுத்த மாதம் விக்ரமின் இரு முகன் பாடல் வெளியீடு!
ஆகஸ்ட் 15-ல் வெளியாகுமா விக்ரமின் இருமுகன் ?
படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்ற இரு முகன் படக்குழு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions