விக்ரமின் கருடா படம் நேற்று தொடங்கியதா?

Bookmark and Share

விக்ரமின் கருடா படம் நேற்று தொடங்கியதா?

சில்வர்லைன் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் புதிய படம் கருடா. இதில் விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக பிரபல ஹிந்தி நடிகர் மகேஷ் மஞ்சுரேகர் நடிக்கிறார்.

இவர் இயக்குனரும் ஆவார். இவருடன் நாசர், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரு இயக்குகிறார். ‘கருடா’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 1 ம் தேதி சென்னையில் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் இப்படத்துக்கான பூஜை நேற்று சென்னையில் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.

இப்படத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து அதில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப் பட்டு படப்பிடிப்பு நடைபெற உள்ளது. சென்னையை அடுத்து பொள்ளாச்சி, கோவை, அகமதாபாத், லக்னோ, ஆகிய இடங்களிலும், பெரும்பகுதி படப்பிடிப்பு அரபு நாடுகளிலும் நடைபெற உள்ளது. இப்படம் பரபரப்பான ஆக்ஷன் படமாக உருவாகிறது.

 


Post your comment





Related News
இளம் நடிகருடன் டேட்டிங், யாரு அது? - காஜல் அகர்வால் ஓபன் டாக்!
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!
விஜய் 61 படத்தின் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா?
ஒரு பாடலுக்கு இனி நடனம் ஆட மாட்டேன்: காஜல் அகர்வால்
விரைவில் சினிமாவை விட்டு விலகுவேன் – காஜல் அதிரடி!
புதிய படத்தில் விக்ரம் ஜோடியாகும் காஜல்!
கபாலியுடன் தொடர்பாகும் ஜீவாவின் கவலை வேண்டாம்!
‘தல 57’ – ல் அடக்கமான மனைவியாக நடிக்கும் காஜல்!
ஜீவாவின் கவலை வேண்டாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரபல நடிகருடன் காபி டேட் செல்லவிரும்பும் காஜல் அகர்வால்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions