அரிமா நம்பி ஆனந்த் சங்கர் இயக்கத்தில், விக்ரம்-காஜல் அகர்வால்!

Bookmark and Share

அரிமா நம்பி ஆனந்த் சங்கர் இயக்கத்தில், விக்ரம்-காஜல் அகர்வால்!

விக்ரம் படம் என்றால் வருடக்கணக்கில் படப்பிடிப்பு நடந்து கொண்டே இருக்கும். அவர் நடித்த படங்கள் உடனடியாக வெளிவராது... இழுத்துக் கொண்டே போகும். என்றெல்லாம் படத்துறையிலேயே பேச ஆரம்பித்துவிட்டனர்.

இந்த விமர்சனம் விக்ரம் காதுக்கும் வந்துவிட்டது போலும். எனவே ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இனி இடைவெளியே கொடுக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

அதன் காரணமாக தற்போது  10 எண்றதுக்குள்ளே படத்தில் நடித்து வரும் விக்ரம் அந்தப்படத்தை முடித்த உடனே ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார்.

ஒரு படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இன்னொரு படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார்.  விக்ரம் பிரபுவை வைத்து அரிமாநம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இந்தப்படத்தை இயக்குகிறார்.  

காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது. கௌதம் மேனன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பும் ஜூன் மாதம்தான் தொடங்குகிறது. இரண்டு படங்களுக்கும் தலா 10 நாட்கள் கால்ஷீட் கொடுப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

இரண்டில் ஒரு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறாராம் விக்ரம்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு! அரசு கொடுத்த விளக்கம்
சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்? - ஏன் தெரியுமா?
விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions