கருடா படப்பிடிப்பு திடீரென ரத்தானது ஏன்?

Bookmark and Share

கருடா படப்பிடிப்பு திடீரென ரத்தானது ஏன்?

இயக்குநர் திரு மற்றும் விக்ரம் இணையும் படத்திற்கு டைட்டில் கூட அறிவிச்சிட்டாங்க ஆனா இன்னும் ஷூட்டிங் போகாம என்ன செய்றாங்க என்று கொஞ்சம் எட்டிப் பார்த்தால், படப்பிடிப்புக்கு போகாமலே கருடனுக்கு கொஞ்சம் காய்ச்சல் வந்துடிச்சு போல...

ஏப்ரல் முதல் வாரத்தில் கருடா படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஷூட்டிங் எதுவும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஏன் இந்த குளறுபடி என்று விசாரித்ததில் கருடா படத்தின் முதல் ஷெட்யூல் 7 நாட்களுக்கு பிளான் செய்திருந்தாராம் இயக்குநர் திரு. ஆனால் இதற்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து முட்டுக்கட்டை விழுந்திருக்கிறது.

ஒரு வாரத்திற்காக பல கோடிகளை செலவு செய்ய முடியாது ஒரே ஷெட்யூலாக முடியுங்கள் என்று கூறிவிட்டார்களாம்.

இதனால் பாடல்கள் கம்போசிங்கிற்கு சென்றுவிட்டார் இயக்குநர் திரு. கருடா படப்பிடிப்பை ஜூலையில் மாற்றிவிட்டாராம். டெல்லி, ஓமன் மற்றும் பல இடங்களில் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions