விக்ரமுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன்: கருணாகரன்

Bookmark and Share

விக்ரமுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன்: கருணாகரன்

விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘இருமுகன்’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யாமேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். தற்போது இந்த படக்குழுவினருடன் கருணாகரன் இணைந்துள்ளார். இப்படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இதுகுறித்து கருணாகரன் கூறும்போது, ‘அதர்வாவுடன் நான் நடித்த ‘கணிதன்’ படத்தை பார்த்த ஆனந்த் சங்கர், உடனே என்னை அழைத்து இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். ஏற்கனவே விக்ரமுடன் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிக்க முடியாமல் போனது. தற்போது ‘இருமுகன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள இருக்கிறேன்’ என்றார்.

இருமுகன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக காஷ்மீர் செல்ல படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions