விக்ரம் படத்தில் பிரான்ஸ் பைட் மாஸ்டர் லீ!

Bookmark and Share

விக்ரம் படத்தில் பிரான்ஸ் பைட் மாஸ்டர் லீ!

விக்ரம் நடித்த படங்களில் பத்து எண்றதுக்குள்ள படம் அதிரடி ஆக்சன் கதையில் உருவாகியிருக்கிறது. குறிப்பாக, ஆக்சன் படங்களில் வில்லன்களுடன் ஹீரோ நேருக்கு நேர் நின்று சண்டையிடுவது போன்றுதான் பெரும்பாலும் காட்சியமைப்பார்கள்.

ஆனால், இந்த படத்தில் வில்லன்களை துரத்தி துரத்தி சென்று சண்டை போடுகிறாராம் விக்ரம். அதனால் சேஸிங் காட்சிகள்தான் அதிகமாம். குறிப்பாக போக்குவரத்து மிகுதியான பகுதிகளிலேயே அந்த காட்சிகள் படமாக்கப்பட்டதால், ஒவ்வொரு சேஸிங் காட்சியை படமாக்கும்போதும் 25 கேமராக்களை பயன்படுத்தினாராம் பிரான்ஸ் பைட் மாஸ்டர் லீ.

மேலும், ஹாலிவுட ஸ்டன்ட் மாஸ்டர்களைப் பொறுத்தவரை, பைட் சீன்களை படமாக்கும் காட்சிகள் என்கிறபோது, கண்டிப்பாக போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பார்களாம். அதோடு, எந்நேரமும் ஸ்பாட்டில் ஒரு மருத்துவ வேன் நின்று கொண்டேயிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வார்களாம்.

அப்படி இருந்தால் மட்டுமே படப்பிடிப்பை தொடங்குவார்களாம். இல்லையேல் நாளை பார்க்கலாம் என்று ஸ்பாட்டை விட்டு போய்க் கொண்டேயிருப்பார்களாம்.

அதனால், இந்த படத்தில் பிரான்ஸ் பைட் மாஸ்டர் லீ கலந்து கொண்டபோது, இந்த வசதிகளெல்லாம் சரியாக செய்து கொடுக்கப்பட்டதாம். குறிப்பாக, 25 கேமராக்களும் அவர் சொன்ன இடங்களில் பொருத்தி, ஹாலிவுட் படங்களைப்போன்று பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார்களாம்.

அதனால் ஐ படத்தை அடுத்து விக்ரம் நடித்துள்ள இந்த பத்து எண்றதுக்குள்ள படமும் இன்னொரு ஹாலிவுட் படம் என்கிறார்கள். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions