மர்ம மனிதன் ஆகிறார் விக்ரம்!

Bookmark and Share

மர்ம மனிதன் ஆகிறார் விக்ரம்!

ஐ படத்தை முடித்துவிட்டு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ளே படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். ஐ படம் வெளியாவதற்கு முன்பே 10 எண்றதுக்குள்ளே படப்பிடிப்பில் கலந்து கொண்ட விக்ரம் கடந்த 3 மாதங்களாக இப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

10 எண்றதுக்குள்ளே படத்தை முடித்துவிட்டு, கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலும், அரிமா நம்பி பட இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இவற்றில் கௌதம் மேனன் இயக்கும் படம் ஜூன் மாதம்தான் தொடங்குகிறது. அதற்கு முன் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தப்படத்துக்கு மர்ம மனிதன் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இந்த தலைப்பை வேறு யாரும் பதிவு செய்யாமல் இருந்தால், இந்த தலைப்பே இறுதியானதாக இருக்குமாம். வேறு யாராவது இதே தலைப்பை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தால் வேறு தலைப்பை சூட்டுவார்களாம்.


Post your comment





Related News
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
மாற்றம் முன்னேற்றம்- 2016ல் நடிகர்கள் எடுத்த அதிரடி முடிவுகள், ஸ்பெஷல்
மனிதன் படத்தின் ஒட்டுமொத்த வசூல் விவரம்!
தனியார் பஸ்ஸில் மீண்டும் திருட்டு டிவிடி: மனிதன் படம் சிக்கியது
மனிதன் படத்துக்கு வரிசலுகை மறுப்பு! பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
உதயநிதியின் மனிதன் படத்துக்கு வரிச்சலுகை மறுப்பு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
மனிதன் படத்தின் வசூல் விவரம் வெளியானது!
மனிதன் படத்தை பாராட்டி தள்ளிய ரஜினி!
மனிதன் படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு மறுப்பு… மீண்டும் கோர்ட்டுக்குப் போகும் உதயநிதி!
சென்சாரில் யூ சான்றிதழ் பெற்ற மனிதன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions