விக்ரமுடன் எப்பவும் நடிக்க மாட்டேன் உறுதியாக உள்ள நயன்தாரா!

Bookmark and Share

விக்ரமுடன் எப்பவும் நடிக்க மாட்டேன் உறுதியாக உள்ள நயன்தாரா!

10 எண்றதுக்குள்ள படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டு நயன்தாராவை அணுகிய போது அவர் விக்ரம் என்று சொன்னதும், கதையைக் கூட கேட்காமல் ஸாரி என்னால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம். 

தன் முன்னாள் காதலரான சிம்புவுடன் உடனே ஜோடி சேர்ந்தவர்தான் நயன்தாரா. அப்படிப்பட்டவர் விக்ரம் உடன் நடிக்க மறுத்தது ஏன்? என்று கேட்டால் எஸ்.ஜே.சூர்யாவுடன் கள்வனின் காதலி என்ற படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியிருந்த நேரம் அது.  

அப்போது முன்னணி ஹீரோவாக இருந்த விக்ரம் உடன் நடிக்க பல நடிகைகள் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தானர்.  அந்த நேரத்தில் தான் நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க நயன்தாராவை அழைத்தாராம் விக்ரம். 

விக்ரம் சார்பாக நயன்தாராவை சந்தித்தவர், எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்க கமிட் ஆன படத்தை வேணாம்னு சொன்னீங்கன்னா விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று கூற கடுப்பாகிவிட்டாராம் நயன்தாரா. 

சினிமாவில் யாரும் ஒஸ்தி கிடையாது. யாரும் மட்டமும் கிடையாது. விக்ரமுக்காக நான் எஸ்.ஜே. சூர்யாவுடன் நடிக்கறேன்னு கொடுத்த வாக்கை கைவிட மாட்டேன். போய் அவர்ட்ட சொல்லுங்க.

இப்ப மட்டுமில்ல, இனி எப்பவுமே விக்ரமுடன் நடிக்க மாட்டேன் என்று கூறி அனுப்பிவிட்டாராம் நயன்தாரா.  அன்றைக்கு சொன்ன மாதிரியே விக்ரம் உடன் நடிப்பதில்லை என்பதில் இப்போது வரை பிடிவாதமாக இருக்கிறார் நயன்தாரா. 

 


Post your comment





Related News
தொடரும் இரு முகனின் வசூல் வேட்டை!
இருமுகன் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும்: துபாயில் விக்ரம் பேட்டி
இரு முகனின் முதல் நாள் வசூல் விவரம்!
இரு முகனுக்கு வந்த திடீர் சோதனை!
அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா இருமுகன்?
இருமுகனுக்கு யூ/ஏ சான்றிதழ்-காரணம் நயன்தாராவா?
இருமுகன் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் பற்றிய தகவல்கள் வெளியானது!
சூப்பர் ஸ்டாரால் தள்ளிபோகும் இரு முகன் ரிலீஸ் தேதி!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இரு முகன் படக்குழு!
சாமி 2 படத்திலும் விக்ரம் ஜோடியாகும் நயன்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions