முதன்முதலாக விக்ரமுடன் இணையும் நயன்தாரா!

Bookmark and Share

முதன்முதலாக விக்ரமுடன் இணையும் நயன்தாரா!

விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. இப்படத்தை விஜய் மில்டன் இயக்கியிருந்தார். இப்படத்தை தொடர்ந்து விக்ரம், ‘அரிமா நம்பி’ இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்திற்கு ‘மர்ம மனிதன்’ என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது காஜல் அகர்வாலுக்கு பதிலாக நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். இதனை, இயக்குனர் ஆனந்த் சங்கர் உறுதிபடுத்தியுள்ளார். விக்ரமும்-நயன்தாராவும் இணையும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே, விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’ படத்தை தயாரித்தவர். மேலும், அனிருத் இசையமைக்கவுள்ளார். நடிகை பிந்துமாதவியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பிற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரத்தை விரைவில் அறிவிக்கவுள்ளனர். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
தொடரும் இரு முகனின் வசூல் வேட்டை!
இருமுகன் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும்: துபாயில் விக்ரம் பேட்டி
இரு முகனின் முதல் நாள் வசூல் விவரம்!
இரு முகனுக்கு வந்த திடீர் சோதனை!
அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா இருமுகன்?
இருமுகனுக்கு யூ/ஏ சான்றிதழ்-காரணம் நயன்தாராவா?
இருமுகன் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் பற்றிய தகவல்கள் வெளியானது!
சூப்பர் ஸ்டாரால் தள்ளிபோகும் இரு முகன் ரிலீஸ் தேதி!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இரு முகன் படக்குழு!
சாமி 2 படத்திலும் விக்ரம் ஜோடியாகும் நயன்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions