விக்ரம் கூட்டணியில் மீண்டும் பசுபதி!

Bookmark and Share

விக்ரம் கூட்டணியில் மீண்டும் பசுபதி!

விக்ரம் நடித்த தூள், அருள், மஜா ஆகிய படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்தவர் பசுபதி. அந்த படங்களுக்குப்பிறகு அவர் வில்லன் இமேஜில் இருந்து விடுபட்டபோதுதான் வெயில் படத்தில் ஹீரோவாக நடித்தார். அதையடுத்து குசேலன், வெடிகுண்டு முருகேசன் படங்களிலும் ஹீரோவாக நடித்தார்.

ஆனால் அந்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால், பின்னர் பசுபதிக்கான படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தன. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு சரியானபடி படங்களே இல்லை.

இந்தநிலையில்தான் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் காமெடி ரோலில் நடித்து மீண்டும் எழுந்து வந்தார் பசுபதி. அதையடுத்து, இந்தியா பாகிஸ்தான் படத்திலும் காமெடி ரோலில் நடித்த பசுபதி, தற்போது விக்ரம் நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள படத்திலும் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

ஏற்கனவே விக்ரமுடன் நடித்த படங்கள் தனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்ததால் இந்த படம் மறுபடியும் தனது சினிமா கேரியரை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கும் பசுபதி, தற்போது ஒரு புதிய படத்தில் மீண்டும் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார். அதேசமயம், முன்பு மாதிரியில்லாமல், சேப்டிக்காக காமெடி கலந்த கதாபாத்திரங்களுக்கே முதலிடம் கொடுத்து வருகிறார் பசுபதி.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions