நட்பு வளர்க்கும் விக்ரம்பிரபு!

Bookmark and Share

நட்பு வளர்க்கும் விக்ரம்பிரபு!

ஆர்ப்பாட்டமான ஹிட் இல்லை என்றாலும், விக்ரம் பிரபு நடித்த படங்கள் எல்லாமே அவருக்கு வெற்றியாகத்தான் அமைந்தன. அந்த வகையில், கும்கி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்காரதுரை படங்களைத் தொடர்ந்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்துள்ள அவர், அடுத்தபடியாக வாஹா என்ற படத்தில் நடிக்கிறார்.

மேலும், சிவாஜிகணேசனின் பேரன், பிரபுவின் மகன் என்கிற பெரிய பின்னணி இருந்தபோதும், படப்பிடிப்பு தளங்களில் எந்தவித பந்தாவும் செய்யாமல், ரொம்ப எளிமையாக காணப்படும் விக்ரம்பிரபு, தனக்கென டிரைவர்கூட வைத்துக்கொள்ளாமல் தானே கார் ஓட்டியும் வருகிறார்.

அதோடு, பெரிய இடத்து நடிகர் என்று யாராவது அவரை நெருங்க தயங்கி நின்றால், இவரே அவர்களை அழைத்து சகஜமாக பேசிப்பழகுகிறாராம். குறிப்பாக, சிலரைப்போன்று ஸ்பாட்டுக்கு வந்த வேகத்திலேயே கேரவனுக்குள் சென்று பதுங்கிக்கொள்ளாமல், சக நடிகர் நடிகைகளிடம் பேசி நட்பு வளர்க்கிறார் விக்ரம்பிரபு.

அவரது இந்த எளிமையான நடவடிக்கை காரணமாக சினிமா வட்டாரத்தில் தற்போது அவருக்கு ஏகப்பட்ட நண்பர்கள் உருவாகி விட்டனர்.


Post your comment





Related News
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions