விக்ரம் பிரபுவுக்கு எம்.ஜி.ஆர் விருது

Bookmark and Share

விக்ரம் பிரபுவுக்கு எம்.ஜி.ஆர் விருது

எம்.ஜி.ஆர், சிவாஜி அகாடமியின் சினிமா விருதுகள் வழங்கும்விழா சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. சினிமா துறையைச் சேர்ந்த பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் விக்ரம் பிரபுவுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.

கும்கி, இவன்வேறமாதிரி, அரிமாநம்பி, சிகரம்தொடு, வெள்ளக்கார துரை மற்றும் இதுஎன்னமாயம் ஆகிய எல்லாப் படங்களிலும் படத்துக்குப் படம் மாறுபட்ட வேடங்களில் நடித்து வரவேற்புப் பெற்ற அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

சிவாஜியின் பேரனான விக்ரம் பிரபுவுக்கு எம்.ஜி.ஆர் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விக்ரம் பிரபு கூறுகையில், இந்த எம்,ஜி.ஆர்.விருதை பெறுவதில் மிகவும் பெருமையடைகிறேன். எனது தாத்தாவும், எம்.ஜி.ஆரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஒரு முறை என தந்தையே கூறியுள்ளார். அவரது படங்களைப் பார்த்து விட்டு எம்.ஜி.ஆர். எப்படியெல்லாம் பாராட்டுவார் என.

எங்களது குடும்பம் எம்.ஜி.ஆருடன் பரஸ்பரம் அன்பு, பாசத்தைப் பகிர்ந்துகொண்டவர்கள் என்ற நிலையில் எனக்கு இந்த விருது மகிழ்ச்சியை அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions