ரம்ஜானுக்கு விக்ரம் பிரபுவின் ஸ்பெஷல் விருந்து!

Bookmark and Share

ரம்ஜானுக்கு விக்ரம் பிரபுவின் ஸ்பெஷல் விருந்து!

விக்ரம் பிரபு-ஷாமிலி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘வீர சிவாஜி’. இப்படத்தை கணேஷ் விநாயக் என்பவர் இயக்கி இருக்கிறார்.

இமான் இசையமைத்திருக்கிறார். மெட்ராஸ் என்டர்பிரைசஸ் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு, வினோதினி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்காக இமான் இசையில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார். ‘தாறுமாறு தக்காளி சோறு’ என ஆரம்பிக்கும் அந்த பாடல் ரஷ்யாவில் படமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வீரசிவாஜி படத்தில் சிம்பு பாடிய ‘தாறுமாறு தக்காளி சோறு’ பாடல் டீசரை நாளை வெளியிடவுள்ளனர். ரம்ஜானையொட்டி இப்பாடல் டீசர் ரசிகர்களுக்கு செமத்தியான விருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நாளை மாலை 6 மணிக்கு இந்த பாடல் டீசரை வெளியிடவுள்ளனர்.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions