விக்ரம் பிரபுவின் வாகா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

விக்ரம் பிரபுவின் வாகா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்ரம் பிரபு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வாகா’. இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ரன்யா ராவ் நடித்துள்ளார்.

இப்படத்தை ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீர் மற்றும் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் படமாக்கப்பட்டுள்ளன. 

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நிலையில், இப்படம் ரிலீஸ் ஆகும் தேதியை அறிவித்திருக்கின்றனர். இப்படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இப்படம் ராணுவம் சம்மந்தப்பட்ட கதை என்பதால் ஆகஸ்ட் 12ம் தேதி படம் வெளியாவது சிறப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். மேலும் இப்படம் விக்ரம் பிரபுவின் சினிமா வாழ்க்கையில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions