விக்ரம் பிரபுவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

Bookmark and Share

விக்ரம் பிரபுவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

‘இது என்ன மாயம்’ படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு தற்போது ‘வீர சிவாஜி’, ‘வாகா’ படங்களில் நடித்து வருகிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படம் இன்று தொடங்கியது.

'சுந்தரபாண்டியன்' படத்தை இயக்கிய பிரபாகரன் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் பிரபு நடிக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பின்னர் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.

பிரபு கிளாப் அடிக்க, தயாரிப்பாளர் தாணு கேமராவை இயக்கி வைக்க, இயக்குனர் பிரபு சாலமன் ஆக்‌ஷன் சொல்லி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக இருக்கிறது. சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions