ஷாம்லியோடு ரஷ்யாவில் டூயட் பாடும் விக்ரம் பிரபு!

Bookmark and Share

ஷாம்லியோடு ரஷ்யாவில் டூயட் பாடும் விக்ரம் பிரபு!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில் “வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

மற்றும் விஷால், வடிவேலு, தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் “ கத்திசண்டை “ படத்தையும் தயாரித்து வருகிறார் அந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

வீரசிவாஜி படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு எம்.சுகுமார், இசை D.இமான், எடிட்டிங் ரூபன் , வசனம் ஞானகிரி, சசி பாலா, பாடல்கள் யுகபாரதி, கபிலன், ரோகேஷ், கலை லால்குடி இளையராஜா, நடனம் தினேஷ், ஸ்டன்ட் திலீப்சுப்பராயன், கதை, திரைக்கதை, இயக்கம் கணேஷ் விநாயக், தயாரிப்பு எஸ்.நந்தகோபால்.

வீரசிவாஜி படத்திற்கு இமான் இசையில்..ரோகேஷ் பாடல் வரிகளில் சிம்பு பாடிய “ தாறுமாறு தக்காளி சோறு என் ஆள பாரு பப்பாளி தோலு “ இந்த பாடலின் படிப்பிடிப்பு ரஷ்யாவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடன அமைப்பில் படமாக்கப் படுகிறது.

ஜூன் 1 ம் தேதி முதல் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. தவிர படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் இசை வெளீயிட்டு விழா நடைபெற உள்ளதாக பட குழுவினர் தெரிவித்தனர் .

 


Post your comment





Related News
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions