விக்ரம் பிரபுவின் அடுத்தப் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

Bookmark and Share

விக்ரம் பிரபுவின் அடுத்தப் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

‘வெள்ளக்கார துரை’ படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு, ஏ.எல். விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்’ படத்திலும், ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் ‘வாகா’ படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விரைவில் வெளியாக உள்ள இப்படங்களை அடுத்து புதிதாக ஒரு படத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறாராம். புதிய படத்தை ‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய நவீன் ராகவன் இயக்கவிருக்கிறாராம். பொழுதுபோக்கு படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகியை தேடிவருகின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இளையராஜாவின் இசையில் 1000-மாவது படமான பாலாவின் தாரைதப்பட்டை விரைவில் வெளியாக உள்ளது. 


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions