விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகும் நிக்கி கல்ராணி

Bookmark and Share

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகும் நிக்கி கல்ராணி

விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’, ‘வீர சிவாஜி’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லஷ்மணின் உதவியாளர் அசோக் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க விக்ரம் பிரபு ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க நிக்கி கல்ராணி ஒப்பந்தமாகியுள்ளார். ‘டார்லிங்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நிக்கி கல்ராணி, ‘கோ-2’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ ஆகிய படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திலும் நடித்து வருகிறார்.

விக்ரம் பிரபு - நிக்கி கல்ராணி இணையும் இந்த புதிய படத்தை பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. 


Post your comment





Related News
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions