ராணுவ வீரர்களின் பாதுகாப்போடு நடந்த விக்ரம் பிரபுவின் படப்பிடிப்பு

Bookmark and Share

ராணுவ வீரர்களின் பாதுகாப்போடு நடந்த விக்ரம் பிரபுவின் படப்பிடிப்பு

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘இது என்ன மாயம்’ படத்தை தொடர்ந்து தற்போது ‘வாகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘ஹரிதாஸ்’ படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கி வருகிறார். இந்திய எல்லையில் நடக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி உருவாகி வரும் படம் என்பதால், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை காஷ்மீரில் படமாக்கி வருகிறார்கள்.

சமீபத்தில் காஷ்மீரின் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் இப்படத்தின் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். அதேபோல், காஷ்மீரின் எல்லைப் பகுதியிலும் சில காட்சிகளை எடுத்துள்ளனர். இந்த படப்பிடிப்புகளின் போது ராணுவ வீரர்கள் இவர்களது பாதுகாப்பு கொடுத்துள்ளனர். சுமார் 50 ராணுவ வீரர்கள் இவர்கள் படப்பிடிப்பு முழுவதுமே பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு படத்தின் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்ரம் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காஷ்மீர் மிகவும் அழகு வாய்ந்த இடம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ரன்யா ராவ் என்ற கன்னடத்து நடிகை நடிக்கிறார். படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions