வீரசிவாஜி படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

வீரசிவாஜி படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘வீரசிவாஜி’. ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை ‘தகராறு’ படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஷாமிலி நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 25ம் தேதி இரவு 7 மணிக்கு இப்படத்தின் டீசரை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் டீசர் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ‘வீரசிவாஜி’ படத்திற்காக சிம்பு ‘தாறு மாறு’ என்று ரோகேஷ் வரிகளில் உருவான ஒரு பாடலை பாடியுள்ளார். மேலும், இப்படத்தில் பேபி சாதன்யா, ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions