ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் நடந்த வாகா படப்பிடிப்பு!

Bookmark and Share

ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் நடந்த வாகா படப்பிடிப்பு!

விக்ரம் பிரபு-ரன்யா ராவ் ஜோடி நடித்து, ஜி.என்.ஆர்.குமரவேல் டைரக்‌ஷனில், பால விஸ்வநாதன் தயாரித்துள்ள படம், ‘வாகா.’ இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடைபெற்று முடிவடைந்து இருக்கிறது. இதுபற்றி விக்ரம் பிரபு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“வாகா, ஒரு காதல் கதை. அதில், நான் எல்லை பாதுகாப்பு படை வீரராக நடித்து இருக்கிறேன். எனக்கு ஜோடியாக-காஷ்மீரை சேர்ந்த பெண்ணாக ரன்யா ராவ் நடித்துள்ளார். ‘ஹரிதாஸ்’ படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் டைரக்டு செய்து இருக்கிறார். இந்திய ராணுவத்தின் அனுமதி பெற்று காஷ்மீரில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 69 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.

தமிழ்நாட்டின் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த விஜயகுமார், டெல்லியில் இப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அவர் பல உதவிகளை செய்தார். 25 ராணுவ வீரர்கள் எங்களுக்கு பாதுகாப்பு அளித்தார்கள். படப்பிடிப்பு நடைபெறும்போது கூடவே இருந்தார்கள். காலையில் ஓட்டலில் இருந்து புறப்படுவதில் இருந்து படப்பிடிப்பு நடத்தி முடித்து விட்டு மாலையில் ஓட்டலுக்கு திரும்புவது வரை, ராணுவ வாகனங்கள் பாதுகாப்பாக எங்களை பின் தொடர்ந்தன.

ஒருநாள் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தபோது, தூரத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் தொடர்ந்து கேட்டது. உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி விட்டு ஓட்டலுக்கு திரும்பும்படி, ராணுவ வீரர்கள் எங்களை கேட்டுக்கொண்டார்கள். அதன் பிறகுதான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்த விவரம் எங்களுக்கு தெரியவந்தது.

காஷ்மீர் மிக அழகான இடம். அங்கு தொடர்ந்து 69 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தது, ஒரு புதிய அனுபவமாக இருந்தது. ராணுவ வீரர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் நம் தமிழர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

கடைசி நாள் படப்பிடிப்பு நடைபெற்றபோது, பாச மிகுதியால் அவர்கள் எங்களை கட்டிப்பிடித்து அழுதார்கள். அவர்களை பிரிவதற்கு எங்களுக்கும் கஷ்டமாக இருந்தது.”

இவ்வாறு விக்ரம் பிரபு கூறினார்.


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions