டூயட் பாட வெளிநாடு செல்லும் விக்ரம்-சமந்தா!

Bookmark and Share

டூயட் பாட வெளிநாடு செல்லும் விக்ரம்-சமந்தா!

ஐ படத்தை அடுத்து விக்ரம் ஆக்சன் ரோலில் நடித்து வரும் படம் பத்து எண்றதுக்குள்ள. இந்த படத்தில் விக்ரமுக்கென்று பில்டப் பாடலும் உள்ளது. அதோடு ஒரு சண்டை காட்சியின் பின்னணியில் பாடல் ஒலிக்க விக்ரம் எதிரிகளை துவம்சம் செய்வது போன்ற அதிரடியான சண்டை பாடலும் இப்படத்தில் உள்ளது.

ஆரம்பத்தில் சென்னையில் படப்பிடிப்பு நடத்திய விஜய்மில்டன், தற்போது படத்தின் கதை நேபாளம் வரை செல்வதால் க்ளைமாக்ஸ் காட்சிகளை நேபாளத்திலேயே ஒரு வார காலம் படமாக்கி விட்டு திரும்பியிருக்கிறார்.

அப்போது விக்ரம், சமந்தா நடித்த சில காதல் காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டதாம். மேலும், இதுவரை அப்படத்தில் ஒரேயொரு டூயட் பாடலை தவிர மற்றவை படமாக்கப்பட்டு விட்டதாம்.

அந்த டூயட் பாடலை ஏதாவது ஒரு வெளிநாடு சென்று படமாக்க திட்டமிட்டுள்ளாராம் விஜய் மில்டன். அதோடு, இந்த படத்தில் சமந்தாவுக்கு சவாலான காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பையும் கொடுத்துள்ள இயக்குனர், விக்ரமுடன் அவர் நடனமாடும் டூயட் பாடல் காட்சியை அதிக ரொமான்டிக்காக படமாக்கப்போகிறாராம்.

தற்போது அவருக்கு தேவையான வித்தியாசமான காஸ்டியூம்கள் தயாரிக்கப்பட்டு வருகிறதாம்.

 


Post your comment





Related News
சமந்தா நடிக்க தடையா?
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions