பல்கேரியா செல்லும் விக்ரம்-சமந்தா!

Bookmark and Share

பல்கேரியா செல்லும் விக்ரம்-சமந்தா!

விக்ரம்-சமந்தா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் பத்து எண்றதுக்குள்ள. இந்த படத்தில் விக்ரம் மாஸ் ஹீரோவாக தனது பாணியை மாற்றி நடித்துள்ளார்.

அதேபோல், சமந்தா இரண்டுவிதமான மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் நேபாளத்தில் நடந்தது. இருப்பினும் இன்னும் பேட்ஜ் ஒர்க் வேலைகள் நிறைய உள்ளதாம்.

ஆனால், நேபாளத்தில் அவர்கள் படப்பிடிப்பு நடத்த பகுதிகள் எல்லாமே நிலநடுக்கத்தில் அழிந்து விட்டதாம். அதோடு, மீண்டும் நேபாளம் செல்லும் எண்ணமும் இல்லையாம்.

அதனால், நேபாளத்தில் படமாக்க திட்டமிட்டிருந்த காட்சிகளை இப்போது பல்கேரியா நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். தற்போது விக்ரம் வேறு படத்திற்கு கால்சீட் கொடுக்கவில்லை என்றபோதும், 24, வேலையில்லா பட்டதாரி-2 படங்களில் சமந்தா பிசியாக இருப்பதால், அடுத்த மாதம் பல்கேரியா சென்று 6 நாட்கள் படப்பிடிப்பு நடத்துகிறாராம் விஜய்மில்டன். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions