விக்ரம் படத்தில் சம்பூர்ணேஷ் பாபுவுக்கு அடித்த யோகம்

Bookmark and Share

விக்ரம் படத்தில் சம்பூர்ணேஷ் பாபுவுக்கு அடித்த யோகம்

தெலுங்கு சினிமா மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையே தன் பக்கம் திருப்பியவர் சம்பூர்ணேஷ் பாபு. சமீபத்தில் இவர் நடித்த படத்திலிருந்து சில காட்சிகள் வாட்ஸ்ஆப் மூலமாக வைரலாக பரவியது.

யாருடா இது நம்ம பவர் ஸ்டாரையே மெண்ணு திண்ணுட்டானே என்று வாயை பிளந்து அந்த வீடியோவை பார்த்தது தமிழ் திரையுலகம். ஆனால் அதுவே தற்போது இவருக்கு சாதகமாக அமைந்துள்ளது.

ஐ படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம் 10 எண்றதுக்குள்ள, த்ரில்லர் கலந்த ஒரு டிராவல் கதையான இந்த படத்தை இயக்கிக் கொண்டிருப்பவர் கோலி சோடா புகழ் விஜய்மில்டன்.

இந்த படத்தில் தான் சம்பூர்ணேஷ் பாபு காமெடியனாக நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இந்த படத்தில் பாலிவுட் ஸ்டார் ஜாக்கி ஷெராஃப் நடிக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் இப்படத்தின் விநியோக உரிமையை படம் முடிவதற்கு முன்பே ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வாங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தை ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்களாம்.

தெலுங்கு பதிப்பிற்கான படப்பிடிப்பை பிப்ரவரியில் தொடங்கவிருக்கிறார்களாம். ஏப்ரலில் இந்த படம் திரைக்கு வந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு பெரிய ஹிரோ, பெரிய நிறுவனத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நிச்சயமாக சம்பூர்ணேஷ்க்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்பதை நிரூபித்துவிட்டது. 


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions