காலை வாரிய தயாரிப்பாளர், திகைக்கும் விக்ரம்..!

Bookmark and Share

காலை வாரிய தயாரிப்பாளர், திகைக்கும் விக்ரம்..!

டைரக்டர் முருகதாஸின் உதவியாளராய் இருந்த ஆனந்த் சங்கருதான் ‘அரிமா நம்பி’ படத்தை எடுத்தார்.

இவரை இயக்குனராக அறிமுகப்படுத்தியது கலைப்புலி எஸ்.தாணு தான். இவர் பேனரில் வந்த படங்கள் எப்பவும் பிரம்மாண்டமாக இருக்கும். அப்போ ‘அரிமா நம்பி’யை விட்டு விடுவாரா என்ன? இதையும் அப்படித்தான் எடுத்தார்.

சொல்லப்போனால் விக்ரம் பிரபு நடித்த படங்களிலேயே கொஞ்சம் பெரிய பட்ஜெட் படம் அது தான். படத்தின் விளம்பரமே படத்திற்கு ப்ளஸ் பாய்ண்ட்டாக அமைய படமும் டெக்னிக்கலாக பேசப்பட்டது. 

சரி அவருக்கே மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்போம் என நினைத்து  விக்ரமுக்கு கதை சொல்ல ஏற்பாடு செய்தார் தாணு. கதை கேட்ட விக்ரம் உடனே ஓகேவும் சொல்லிவிட்டார்.
இதைக் கேள்விப்பட்ட ‘ஐங்கரன் இன்டர்நேஷனல்’ கருணாமூர்த்தி, ‘பீமா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே என்னிடம் ஒரு தொகையை அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார் விக்ரம்.

ஆனால் இன்னும் படம் நடித்து கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். என்று தயாரிப்பாளர் சங்கத்தில் கருணாமூர்த்தி புகார் கொடுக்க ‘மர்ம மனிதன்’ படம் இவருக்கு வந்தது.

ஆனால் அண்மையில வந்த ‘10 எண்றதுக்குள்ள’ படம் படு தோல்வியடைந்ததால் ‘மர்ம மனிதன்’ படமே வேண்டாம் என ஓடியிருக்கிறார் கருணா. இந்த வேணும் வேண்டாம் விளையாட்டில் கொஞ்சம் திகைத்து போனார் விக்ரம்.

பின்புதான் ‘புலி’ படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீம் விக்ரமிற்கு கைகொடுத்திருக்கிறார். ’மர்ம மனிதன்’ படத்தை அவர் தயாரிக்கவிருக்கிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions