விக்ரமின் கருடா எந்த மாதிரியான படம்: இயக்குனர் திரு பேட்டி

Bookmark and Share

விக்ரமின் கருடா எந்த மாதிரியான படம்: இயக்குனர் திரு பேட்டி

விக்ரமுக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இணைந்து விக்ரமுக்காக ஆல்பம் ஒன்றை வெளியிட்டனர்.

இதில் விக்ரம் ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ‘இருமுகன்’ படத்தின் தயாரிப்பாளரும், விக்ரமை வைத்து ‘கருடா’ படத்தை இயக்கவிருப்பவருமான இயக்குனர் திரு கலந்துகொண்டார்.

விழாவில் அவர் பேசும்போது, விக்ரமை தமிழ் சினிமாவில் இரண்டு முகமாக தெரியும். ஒரு நல்ல கேரக்டர் நடிகர், மற்றொன்று மாஸ் நடிகர். இதில் எனக்கு மிகவும் பிடித்தது மாஸ் நடிகர்தான்.

அதனால், என் படத்திலும் அவரை மாஸ் நடிகராகவே காட்டவிருக்கிறேன். எனக்கு இறங்கி அடிக்கிற மாஸ் விக்ரம்தான் பிடிக்கும். ‘கருடா’ படத்தில் ஒரு மாஸ் விக்ரமை எல்லோரும் பார்க்கலாம் என்று கூறினார்.

மேலும், கருடா பற்றிய மேலும் பல தகவல்களை திருவிடம் அனைவரும் கேட்டனர். அதற்கு திரு இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இருமுகன்’ படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. இன்றைக்கு அந்த ஒரு தகவலே போதும். வேறொரு நல்ல நாளில் கருடா பற்றின பிற விவரங்களை பேசலாம் என்று கூறினார். மேலும், இருமுகன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions