விக்ரம் படத்தில், விஜய் பட டிரைலர்!

Bookmark and Share

விக்ரம் படத்தில், விஜய் பட டிரைலர்!

சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் புலி படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் முடிவடைந்துள்ளது.

சென்னை, கேரளா, தலக்கோணம் ஆகிய ஊர்களில் புலி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதை அடுத்து இப்படத்திற்கான பாடல் காட்சி கம்போடியாவில் படமாக்கப்பட்டது. விஜய் உடன் ஹன்சிகா மோத்வானி பங்குபெறும் பாடல் காட்சிகள் மட்டும் அங்கே படமாக்கப்பட்டன.

அதற்காக, இயக்குனர் சிம்புதேவன், ஒளிப்பதிவாளர் நட்ராஜ், மற்றும் 40 நடன கலைஞர்கள் உட்பட படக்குழுவினர் கடந்த மாதம் கம்போடியா நாட்டுக்குச் சென்றனர்.  

அங்கு விஜய், ஹன்சிகாவுடன் 40 நடனக் கலைஞர்களும் பங்கேற்கும் பாடல்காட்சி படமாக்கப்பட்டநிலையிலி, அங்கிருந்து பல்கேரியா சென்றனர்.

அங்கு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் படமாக்காத லொகேஷன்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதியாக தாய்லாந்தில் புலி படப்பிடிப்பு நிறைவடைந்தது.  இதனை தொடர்ந்து சென்னை திரும்புகிறது புலி படக்குழு. 

இதற்கிடையில் விக்ரம் நடித்து விரைவில் வெளியாக உள்ள 10 எண்றதுக்குள்ளே படத்துடன், விஜய்யின் புலி படத்தின் தியேட்டரிகல் டிரெய்லரை வெளியிட இருப்பதாக தற்போது தகவல் வௌியாகியுள்ளது. முன்னதாக புலி படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்தநாளில் வௌியிட உள்ளனர்.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
அஜித், விஜய்யை தொடர்ந்து அதே இடத்திற்கு கிளம்பிய விக்ரம்
விக்ரமுடன் மோதவுள்ள கொடூர வில்லன்
விக்ரமுக்கு வில்லன் இந்த பாலிவுட் நடிகரா ?
விஜய்யை இயக்க வேண்டும் – விக்ரம் விருப்பம்!
சிவகார்த்திகேயன் படத்தை வெளியிடும் விஜய், விக்ரம் பட தயாரிப்பாளர்
விக்ரம், விஜய்யை வைத்து பிரமாண்ட படம் எடுக்கும் ஷங்கர்?
விக்ரம் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியானது!
விக்ரம் இயக்கும் பாடலுக்கு விஜய், அஜித் வருவார்களா?
விக்ரமிற்காக தன் டைட்டிலை கொடுத்தாரா விஜய்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions