விக்ரமிற்கு உதவி செய்த விஜயின் தயாரிப்பாளர்

Bookmark and Share

விக்ரமிற்கு உதவி செய்த விஜயின் தயாரிப்பாளர்

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘10 எண்றதுக்குள்ள’. இதில் சமந்தா ஜோடியாக நடித்திருந்தார். விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது.

இப்படத்தையடுத்து 'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘மர்ம மனிதன்’ என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை முதலில் கலைப்புலி தாணு தயாரிப்பதாக கூறினார்கள். தாணு தற்போது, ரஜினியின் ‘கபாலி’ படத்தையும், விஜய் படத்தையும் தயாரித்து வருகிறார்.

இதனால் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருந்ததாகவும் தகவல் வெளியானது. தற்போது அந்த நிறுவனம் பின்வாங்கிவிட்டதாக கூறுகிறார்கள்.

இந்நிலையில் விக்ரம்-ஆனந்த் சங்கரின் புதிய படத்தை தயாரிக்க ஷிபு தமீன் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions