துல்கர் சல்மானின் 'விக்ரமாதித்யன்' இரண்டாம் பாகம் தயாராகிறது..!

Bookmark and Share

துல்கர் சல்மானின் 'விக்ரமாதித்யன்' இரண்டாம் பாகம் தயாராகிறது..!

கடந்த வருடம் துல்கர் சல்மான் மலையாளத்தில் இரண்டு ஹிட்டுகளை கொடுத்தார்.. ஒன்று 'பெங்களூர் டேய்ஸ்'.. இன்னொன்று 'விக்ரமாதித்யன்'. இதில் விக்ரமாதித்யன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பிளான் செய்திருக்கிறார் அந்தப்படத்தின் இயக்குனரான லால்ஜோஸ்.

அப்படி இரண்டாம் பாகம் எடுக்கும் அளவுக்கு அந்தப்படத்தில் என்ன ஸ்பெஷல்..? துல்கர் சல்மான், உன்னி முகுந்தன் என இரண்டு முன்னணி ஹீரோக்கள் நடித்திருக்கிறார்கள்... ஆனால் இது முழு ஆக்ஷன் படம் இல்லை.. அப்படியானால் லவ் ரொமாண்டிக் படமா..? அதுவும் இல்லை..

இருவரும் போலீஸ் ஆக முயற்சி செய்கிறார்கள் என்பதால் போலீஸ் ஸ்டோரியா..ம்ஹூம்..  இந்த வரையறைகள் எதிலும் சிக்காத ஒரு படம் தான் 'விக்ரமாதித்யன்'. இரண்டு ஹீரோக்களை சரியாக பேலன்ஸ் செய்து லைட்டான ஆக்ஷன், மீடியமான காதல் என சரிவிகிதத்தில் கலந்து குடும்ப மசாலா கிளறியிருந்தார் லால் ஜோஸ்..

க்ளைமாக்ஸில் போலீஸில் சேர்வதே தனது லட்சியமாக கொண்டிருந்த உன்னி எஸ்.ஐயாகவும், திருடனின் மகனான துல்கர் போனால் போகிறது என தேர்வு எழுதியதில் ஐ.பி.எஸ் அதிகாரியாக செலெக்ட் ஆவதாகவும் படம் முடிந்திருந்தது. இனி இதன் இரண்டாம் பாகத்தை எப்படி பின்னப்போகிறார் என்பது லால் ஜோசுக்கே வெளிச்சம். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions