ஹீரோவுக்கு விருப்பம் இல்லாததால் கைவிடப்பட்ட இரண்டாம் பாகம்..!

Bookmark and Share

ஹீரோவுக்கு விருப்பம் இல்லாததால் கைவிடப்பட்ட இரண்டாம் பாகம்..!

லால்ஜோஸ் டைரக்சனில் துல்கர் சல்மான், உன்னி முகுந்தன், நிவின் பாலி நடித்து கடந்த வருடம் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் தான் 'விக்ரமாதித்யன்'.. படம் நூறாவது நாள் விழாவையும் கொண்டாடியது.

இந்த நிலையில் தான் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் லால் ஜோஸ் ஆர்வமாக இருக்கிறார் என ஊடகங்களில் பரபரப்பான தகவல் வெளியானது. ஆனால் இது யார் கிளப்பிவிட்ட வதந்தி என்று தெரியவில்லை.. தங்களுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை என விக்ரமாதித்யன் டீம் மறுத்திருக்கிறது..

இதற்கு உதாரணமாக இரண்டு காரணங்களை சொல்கின்றனர் படக்குழுவினர்..  அதாவது துல்கர் சல்மான் ஆரம்ப காலத்தில் இருந்தே படங்களை ரீமேக் செய்வதிலும், வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பதிலும் உடன்பாடு இல்லாதவராக, அந்த விஷயத்தில் எதிர் கருத்து கொண்டவராகவே இருந்து வருகிறார்.

இயக்குனர் லால் ஜோஸும் தற்போது தான் இயக்கிவரும் 'நீனா' படத்தை அடுத்து நிவின் பாலி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். அப்படி இருக்கும்போது 'விக்ரமாதித்யன்' இரண்டாம் பாகம் எடுப்பதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் இப்போது பலூனில் ஊசி குத்தியதுபோல 'புஸ்' என்று ஆகிவிட்டது.. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions