சமையல் கியாஸ் மானியம் வேண்டாம் என்று 200 டைரக்டர்கள் முடிவு எடுப்பார்கள்: விக்ரமன் அறிவிப்பு

Bookmark and Share

சமையல் கியாஸ் மானியம் வேண்டாம் என்று 200 டைரக்டர்கள் முடிவு எடுப்பார்கள்: விக்ரமன் அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில் ‘வசதி படைத்தவர்கள் தங்களுக்கு சமையல் கியாஸ் மானியம் வேண்டாம்’ என்று பெருந்தன்மையுடன் கூறிவிட்டால் அந்த தொகையை அரசு கஜானாவில் சேர்க்காமல் வறுமை கோட்டுக்குகீழ் வாழும் ஒரு பரம ஏழையின் வீட்டில் கியாஸ் அடுப்பு எரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இதனை ‘தினத்தந்தி’ பத்திரிகையில் வெளியான தலையங்கம் சுட்டிக்காட்டி பாராட்டி இருந்தது. பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வசதிபடைத்தவர்கள் சமையல் கியாஸ் மானியத்தை வேண்டாம் என விட்டுகொடுக்கவேண்டும் என்றும் வற்புறுத்தி இருந்தது.

இந்த தலையங்கத்தை படித்த நடிகர் விவேக், கியாஸ் சிலிண்டர் மானியத்தை திருப்பி அளிப்பதாக அறிவித்தார். தமிழ் திரைப்பட டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமனும், சமையல் கியாஸ் மானியத்தை திருப்பி அளிப்பதாக அறிவித்தார். 

இதுகுறித்து நிருபரிடம், விக்ரமன் கூறியதாவது:- 

வசதி படைத்தவர்கள் சமையல் கியாஸ் மானியம் வேண்டாம் என திருப்பி அளிக்கவேண்டும் என்ற ‘தினத்தந்தி’ தலையங்கத்தையும், அதன்மூலம் நடிகர் விவேக் உள்ளிட்டோர் சமையல் கியாஸ் மானியத்தை திருப்பி கொடுக்கப்போவதாக அறிவித்ததையும் படித்தேன். நானும் சமையல் கியாஸ் மானியத்தை திருப்பி கொடுக்க முடிவு செய்துள்ளேன். 

இதுகுறித்து சமையல் கியாஸ் ஏஜென்சிக்கு கடிதமும் அனுப்பிவிட்டேன். வசதி படைத்தவர்கள் திருப்பி தரும் மானியம் ஏழைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று பிரதமர் அறிவித்து இருக்கிறார். வசதிபடைத்தவர்கள் இந்த மானியத்தை விட்டுக்கொடுத்தால் ரூ.1,000 கோடிக்குமேல் மிச்சமாகும். இதன்மூலம் ஏழைகளுக்கு நிறைய சலுகைகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். 

இயக்குனர் சங்க தலைவராக 6-ந்தேதி மீண்டும் பதவி ஏற்க உள்ளேன். அப்போது 200 டைரக்டர்களை சமையல் கியாஸ் மானியம் வேண்டாம் என்று சொல்ல வைப்பேன். என்னைப்போன்றவர்கள் இந்த முடிவு எடுக்க காரணமாக இருக்கும் ‘தினத்தந்தி’க்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

இவ்வாறு விக்ரமன் கூறினார்.


Post your comment





Related News
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
மலையையே தூக்கி வைத்தாலும் தாங்கக்கூடியவர் விஜய் – புகழும் பிரபல இயக்குனர் !
முதல்வருடன் திரைப்பட இயக்குநர் சங்கத்தினர் சந்திப்பு!
இயக்குனர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
சினிமா டைரக்டர்கள் சங்க தேர்தலில் விக்ரமன் மீண்டும் போட்டி
தயாரிப்பாளர்களுக்கு இயக்குனர்கள் சங்கம் கோரிக்கை
விழா தொகுப்பாளர் மீது கோபப்பட்ட விக்ரமன்
\"லிங்கா\' திரைப்பட நஷ்டத்தை ரஜினியிடம் கேட்பது நியாயம் அல்ல- இயக்குநர் விக்ரமன்
கதை திருட்டை தடுக்க இயக்குநர் சங்கம் புது முயற்சி!
கத்தி படத்தை எடுப்பவர்கள் தமிழர்கள் - இயக்குநர் விக்ரமனின் கண்டுபிடிப்பு!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions