இயக்குனர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Bookmark and Share

இயக்குனர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு நேற்று (ஜூலை 5) தேர்தல் நடப்பதாக இருந்தது. இதில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற விக்ரமன் அணியினர் மீண்டும் போட்டியிட்டனர்.

அவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. இணை செயலாளர், மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு சிலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களும் வாபஸ் பெற்றதையொட்டி தேர்தல் நடக்காமலேயே அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள்

விபரம் வருமாறு:

தலைவர்: விக்ரமன்

துணை தலைவர்கள்: கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு

பொதுச் செயலாளர்: ஆர்.கே.செல்வமணி

இணை செயலாளர்கள்: லிங்குசாமி, சுந்தர்.சி, ஏகாம்பவாணன், பேரரசு,

பொருளாளர்: வி.சேகர்

செயற்குழு உறுப்பினர்கள்: ஐந்துகோவிலான், கமலகண்ணன், மனோபாலா, மூதுரை பொய்யாமொழி, நம்பிராஜன், ஜெயம்ராஜா, ராஜா கார்த்திக், ரமேஷ் கண்ணா, ரவிமரியா, சமுத்திரகனி, திருமலை, வேல்முருகன்.

இதனை நேற்று தேர்தல் அதிகாரியும், வழக்கறிஞருமான சிங்காரவேலன் முறைப்படி அறிவித்தார். பின்னர் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர் அவருக்கு தேர்தல் அதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார் வருகிற 8ந் தேதி சங்கத்தின் பொதுக்குழு கூடுகிறது. அதில் பல புதிய திட்டங்களை அறிவிக்கிறார் தலைவர் விக்ரமன்.

அதோடு மேலும் 5 நியமன செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.


Post your comment





Related News
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
மலையையே தூக்கி வைத்தாலும் தாங்கக்கூடியவர் விஜய் – புகழும் பிரபல இயக்குனர் !
முதல்வருடன் திரைப்பட இயக்குநர் சங்கத்தினர் சந்திப்பு!
சமையல் கியாஸ் மானியம் வேண்டாம் என்று 200 டைரக்டர்கள் முடிவு எடுப்பார்கள்: விக்ரமன் அறிவிப்பு
சினிமா டைரக்டர்கள் சங்க தேர்தலில் விக்ரமன் மீண்டும் போட்டி
தயாரிப்பாளர்களுக்கு இயக்குனர்கள் சங்கம் கோரிக்கை
விழா தொகுப்பாளர் மீது கோபப்பட்ட விக்ரமன்
\"லிங்கா\' திரைப்பட நஷ்டத்தை ரஜினியிடம் கேட்பது நியாயம் அல்ல- இயக்குநர் விக்ரமன்
கதை திருட்டை தடுக்க இயக்குநர் சங்கம் புது முயற்சி!
கத்தி படத்தை எடுப்பவர்கள் தமிழர்கள் - இயக்குநர் விக்ரமனின் கண்டுபிடிப்பு!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions