சினிமா டைரக்டர்கள் சங்க தேர்தலில் விக்ரமன் மீண்டும் போட்டி

Bookmark and Share

சினிமா டைரக்டர்கள் சங்க தேர்தலில் விக்ரமன் மீண்டும் போட்டி

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இதுவரை சங்கத்தின் தலைவராக டைரக்டர் விக்ரமன், செயலாளராக டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக டைரக்டர் வி.சேகர், துணைத்தலைவர்களாக டைரக்டர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் பதவி வகித்து வந்தார்கள். 

இவர்களின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 5-ந்தேதி நடக்கிறது. தலைவர் பதவிக்கு டைரக்டர் விக்ரமன் மீண்டும் போட்டியிடுகிறார். இதேபோல் செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் பதவிக்கு வி.சேகர், துணைத்தலைவர் பதவிக்கு பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகிறார்கள். 

கடந்த 4-ந்தேதி நடைபெற்ற டைரக்டர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வேட்பு மனுதாக்கல் வருகிற 19-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை 23-ந்தேதி நடக்கிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் 26-ந்தேதி வெளியிடப்படுகிறது. ஓட்டுப்பதிவு ஜூலை 5-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். 

டைரக்டர்கள் சங்கத்தின் மொத்தம் 2 ஆயிரத்து 500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் ஓட்டு போட்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள். ஓட்டு எண்ணிக்கை ஜூலை 5-ந்தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும். வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக இருந்து இந்த தேர்தலை நடத்துவார். மேற்கண்ட தகவல்களை டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன் தெரிவித்தார்.


Post your comment





Related News
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
மலையையே தூக்கி வைத்தாலும் தாங்கக்கூடியவர் விஜய் – புகழும் பிரபல இயக்குனர் !
முதல்வருடன் திரைப்பட இயக்குநர் சங்கத்தினர் சந்திப்பு!
இயக்குனர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
சமையல் கியாஸ் மானியம் வேண்டாம் என்று 200 டைரக்டர்கள் முடிவு எடுப்பார்கள்: விக்ரமன் அறிவிப்பு
தயாரிப்பாளர்களுக்கு இயக்குனர்கள் சங்கம் கோரிக்கை
விழா தொகுப்பாளர் மீது கோபப்பட்ட விக்ரமன்
\"லிங்கா\' திரைப்பட நஷ்டத்தை ரஜினியிடம் கேட்பது நியாயம் அல்ல- இயக்குநர் விக்ரமன்
கதை திருட்டை தடுக்க இயக்குநர் சங்கம் புது முயற்சி!
கத்தி படத்தை எடுப்பவர்கள் தமிழர்கள் - இயக்குநர் விக்ரமனின் கண்டுபிடிப்பு!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions