விழா தொகுப்பாளர் மீது கோபப்பட்ட விக்ரமன்

Bookmark and Share

விழா தொகுப்பாளர் மீது கோபப்பட்ட விக்ரமன்

ராதிகாவின் ராடன் மீடியா தயாரிப்பில், விஜய் இயக்கத்தில், விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இது என்ன மாயம் படத்தின் இசைவெளியீட்டுவிழா சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

திரையுலகப் பிரபலங்கள் திரண்டு வந்த அந்த விழாவில், திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமனும் கலந்து கொண்டார். அவரைப் பேச அழைத்தபோது நிகழ்ச்சித்தொகுப்பாளர்களில் ஒருவரான பாலாஜி, இப்போது டைரக்டர் விக்ரமன் சென்ட்டிமெட்டாக.. நம்மை எல்லாம் அழ வைக்கும்படி பேசுவார் என்று நக்கலாக சொன்னார், அதாவது விக்ரமனின் படங்கள் சென்ட்டிமெண்ட்டாக இருக்கும், ரசிகர்களை அழ வைக்கும் என்ற அர்த்தத்தில் அவர் சொன்னதை விக்ரமன் ரசிக்கவில்லை.

இது என்ன மாயம் படத்தை வாழ்த்திப்பேசிவிட்டு, என் படங்கள் எல்லாம் சென்ட்டிமெண்ட் படங்கள் அல்ல. காமெடிப்படங்களும் எடுத்திருக்கிறேன். இன்னொரு விஷயம்... நான் காலேஜில் படிக்கும்போது காலேஜ் செக்ரட்டரியாக இருந்தவன். எனக்கும் கலாய்க்கத் தெரியும் என்று முகத்தில் அடித்ததுபோல் பேச... பாலாஜி முகத்தில் வழிந்தது அசடு.


Post your comment





Related News
பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை - "அவளுக்கென்ன அழகியமுகம்"
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் செல்ஃபி போட்டி
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions