தயாரிப்பாளர்களுக்கு இயக்குனர்கள் சங்கம் கோரிக்கை

Bookmark and Share

தயாரிப்பாளர்களுக்கு இயக்குனர்கள் சங்கம் கோரிக்கை

தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி பொதுக்குழுவில் உரையாற்றி இதுவரை சங்க உறுப்பினர்களுக்குச் செய்த பல உதவிகளைப் பற்றி அறிவித்தனர்.

அதைத் தொடர்ந்து பொருளார் வீ.சேகர் 31-5-2015 முடிய உள்ள வரவு செலவு கணக்குகளைத் தாக்கல் செய்தார். செயலாளர் R.K செல்வமணி, அடுத்த தேர்தலுக்கான தேதி பற்றி அறிவிக்கும் போது “நமது சங்க உறுப்பினர்கள் பலர் தற்போதுள்ள நிர்வாகம் நல்ல முறையில் சங்கத்தை வழி நடத்திச் செல்வதால் தேர்தலை நடத்தாமல் இந்நிர்வாகமே தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதைத் தெரியப்படுத்தினார்.

இருந்தாலும் அதை ஏற்க மறுத்து மறுத்து தேர்தலை அறிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், “ஒரு திரைப்படத்தின் டிஜிட்டல் பிரதி எடுக்க QUBE, UFO, PXD நிறுவனத்திற்கு ரூ 1.5 லட்சம் கட்டணத் தொகை செலுத்த வேண்டியதாக உள்ளது.

ஆனால் அதற்கான செலவோ ரூ 2000 மட்டுமே. இதற்கான தொழிற் நுட்ப செலவு 1 கோடி மட்டுமே என்பதால் இதற்கான முதலீட்டை தயாரிப்பாளர்கள் சங்கம் செய்து திரைப்படத்தின் செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் திரு S.தாணுவிடம் முன் வைத்தார்.

மேலும் உறுப்பினர் குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரிக்கான கல்வி உதவியை இயக்குநர் சுந்தர்.சி ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.


Post your comment





Related News
பெப்சி தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் - ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு
முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்
பெப்சி தலைவர் R.K.செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக விஷால் 10லட்சம் அளித்தார்.
தமிழ் அரசிடம் மனு கொடுக்க வருகிற புதன்கிழமை கோட்டையை நோக்கி பேரணியாக செல்லவுள்ளோம் - தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்
அடேங்கப்பா ரோஜாவின் மகளா இது? வியக்கும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் ராக்கர்ஸை நண்பனாக பாருங்க: விஷாலுக்கு ஆர்.கே செல்வமணி கோரிக்கை
தொழில் தெரியாத டைரக்டர்கள் படங்களை இயக்க தடை: ஆர்.கே.செல்வமணி பேட்டி
பெப்சி அமைப்புக்கு தலைவரானார் ஆர்.கே.செல்வமணி
மானத்தை வாங்காதீர்கள்: நடிகர் சங்கத்துக்கு ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்
திருட்டு வி.சி.டி.க்கு எதிராக அடுத்த மாதம் 2-ந்தேதி நடிகர்-நடிகைகள் பேரணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions