வில்லன் ஆனார் விக்ராந்த்

Bookmark and Share

வில்லன் ஆனார் விக்ராந்த்

விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த், கிட்டத்தட்ட அவரைப்போன்ற தோற்றம் கொண்ட விக்ராந்த் 2005ம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு நெஞ்சத்தை கிள்ளாதே, நினைத்து நினைத்து பார்த்தேன், எங்கள் ஆசான், கோரிப்பாளையம் உள்பட பல படங்களில் நடித்தார்.

ஆனாலும் 10 ஆண்டுகள் ஆகியும் விக்ராந்தால் ஒரு ஹீரோவாக ஜெயிக்க முடியவில்லை. சிசிஎல் எனப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள்தான் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. விக்ராந்த் அடித்த செஞ்சுரிகள்தான் சென்னை அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.

அந்த வகையில் சென்னை அணியின் கேப்டனாக இருந்த விஷாலின் நண்பராக ஆனார்.

அதன் அடிப்படையில் பாண்டியநாடு படத்தில் விஷாலுக்கு முக்கிய கேரக்டர் கொடுத்தார் விஷால். அந்த கேரக்டர் விஷாலுக்கு நல்ல ரீ எண்ட்ரியை கொடுத்தது. என்றாலும் விஷால், விக்ராந்தை ஹீரோவாக போட்டு படம் எடுப்பேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் நடிக்கும் கெத்து படத்தில் டெரர் வில்லனாக நடிக்கிறார் விக்ராந்த். முதன் முறையாக ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் உதயநிதி ஸ்டாலின் பிரகாஷ்ராஜ், சத்யராஜ், கோட்டா சீனிவாராவ், ஆஷிஷ் வித்யார்த்தி மாதிரி பெரிய வில்லன்கள் இருந்தால் நாம் காமெடி பீசாக தெரிவோம் என்று கருதி புதிய வில்லனாக, இளம் வில்லனாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதன் படி அவரது யோசனையில் வந்தவர் விக்ராந்த்.

விஷயத்தை அவரிடம் சொல்ல விக்ராந்த் உடனே ஓகே சொல்ல நடிக்க ஆரம்பித்துவிட்டார். விக்ராந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் டார்ஜிலிங் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions