பின்வாங்குகிறார் விக்ராந்த்!

Bookmark and Share

பின்வாங்குகிறார் விக்ராந்த்!

எஜமான் படத்தை இயக்கிய ஆர்.வி.உதயகுமார் இயக்கிய கற்க கசடற படத்தில் அறிமுகமானவர் விக்ராந்த். இந்த படத்தில்தான் ராய்லட்சுமியும் அறிமுகமானார். விஜய்யின் சித்தி மகன் என்பதால் விக்ராந்தும் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்துக்கு வருவார் என்ற பேச்சு ஆரம்பத்தில் இருந்தது.

ஆனால், அதன்பிறகு அவர் நடித்த நினைத்து நினைத்து பார்த்தேன். முதல் கனவே, நெஞ்சத்தை கிள்ளாதே,என எந்த படமும் பெரிதாக வெற்றி பெறாததால் மார்க்கெட்டில் பின்தங்கியே இருந்த வருகிறார் விக்ராந்த். இந்நிலையில் பாண்டியநாடு படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த அவர், தனது தம்பி இயக்கத்தில் பிறவி என்ற படத்திலும் நடித்தார்.

ஆனால் அந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை. அதையடுத்து, விக்ராந்த் நடித்துள்ள படம்தான் தாக்க தாக்க. இப்படம் வருகிற 31-ந்தேதி திரைக்கு வருவதாக இருந்தது.

ஆனால், அதே நாளில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வருவதால் தியேட்டர் பிரச்னை ஏற்படும் என்று இப்போது பின்வாங்கி விட்டனர். அதனால் ஆகஸ்டு முதல் வாரத்தில் தாக்க தாக்க வெளிவரும் என்கிறார்கள். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.

 


Post your comment





Related News
நடிகர் விக்ராந்தின் மனைவியா இப்படி? - வைரலாகும் புகைப்படம்.!
இனி வரவே மாட்டேன், ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய கிரிக்கெட் நடிகரின் முடிவு - யார்? என்ன நடந்தது?
விறுவிறுப்பாக உருவாகி வரும் `வெண்ணிலா கபடி குழு-2'
தொண்டன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு!
விக்ராந்தை மேடையில் கண்ணீர் விட வைத்த பாலா- ஏன்?
விக்ராந்த்-சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு-2 பூஜையுடன் தொடக்கம்
சிசிஎல் கிரிக்கெட்: விக்ராந்த் அதிரடி சாதனை
தாக்க தாக்க படத்திற்கு விஜய் உதவி!
விக்ராந்தின் தாக்க தாக்க ஜூலை 31ம் தேதி ரிலீஸ்
கெத்து படத்தில் ஸ்டைலான வில்லனாக நடிக்கும் விக்ராந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions