விக்ராந்த்துக்காக ஆடிய ஆர்யா, விஷால், விஷ்ணு

Bookmark and Share

விக்ராந்த்துக்காக ஆடிய ஆர்யா, விஷால், விஷ்ணு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ராந்த் ஹீரோவாக நடிக்கும் படம் தாக்க தாக்க. ஸ்டூடியோ வெர்ஸ்டைல் என்ற நிறுவனமும், யுனிகார் பிரேம்ஸ் சார்பில் தாரா அருள்ராஜூம் இணைந்து தயாரிக்கிறார்கள். புதுமுகம் சஞ்சீவ் இயக்குகிறார். சுஜித் இசை அமைத்துள்ளார். ஜேக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் விக்ராந்த் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டது விரைவில் வெளிவர இருக்கிறது. கலைப்புலி இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது. செலிபிரிட்டி கிரிக்கெட் மூலம் விக்ராந்துக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.

அதில் கிரிக்கெட் கேப்டன் விஷால், ஆர்யா, விஷ்ணு ஆகியோர் முக்கியமானவர்கள். இந்தப் படத்தில் வரும் விக்ராந்தின் ஓப்பனிங் பாடலுக்கு நட்புக்காக ஆர்யா, விஷால், விஷ்ணு ஆடியிருக்கிறார்கள். இன்னும் சில முக்கியமான விக்ராந்த் நண்பர்களும் ஆடியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் மூலம் விக்ராந்த தனி ஹீரோவா ஜெயிப்பேன் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறார். அடுத்த வாரம் பாடல்களும், அடுத்த மாதம் படமும் வெளிவருகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions