விக்ராந்த் பிறவி படத்தின் பெயர் மாறியது...!

Bookmark and Share

விக்ராந்த் பிறவி படத்தின் பெயர் மாறியது...!

விஜய்யின் தம்பி என்ற விசிட்டிங் கார்ட் உடன் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கியவர் விக்ராந்த். விஜய்யின் அம்மா ஷோபாவின் தங்கையான ஷீலா என்பவரது மகன்தான் இவர்.

பல வருடங்களுக்கு முன் மனம் என்ற படத்தைத் தயாரித்த ஷீலா அப்படத்தினால் பல லட்சம் நஷ்டம் அடைந்தார். அதன் பிறகு ஷீலாவின் மூத்த மகன் சஞ்சீவ் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தார்.

அந்தப்படம் பின்னர் ட்ராப்பாகிவிட்டது.  ஹீரோவாக வெற்றி பெறமுடியாத சஞ்சீவ் சில வருடங்களுக்கு முன் தன் தம்பி விக்ராந்தை வைத்து பிறவி என்ற படத்தை இயக்கினார். இரண்டு வருடங்களுக்கு முன் அப்படத்தின் டீசர் வெளியீட்டுவிழா நடைபெற்றது.

ஆனாலும் அந்தப்படம் வெளிவரவே இல்லை. இந்நிலையில் பிறவி படத்தின் பெயரை தாக்க தாக்க என மாற்றி உள்ளனர். அதோடு ஆர்யா, விஷால், விஷ்ணு ஆகியோர் கெஸ்ட்ரோலில் நடித்தும் உள்ளனர். தாக்க தாக்க படத்தை கலைப்புலி தாணு தமிழகம் முழுக்க வெளியிடுகிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions