ஹீரோக்கள் சந்தித்து கொள்ளாத வில் அம்பு

Bookmark and Share

ஹீரோக்கள் சந்தித்து கொள்ளாத வில் அம்பு

இயக்குனர் சுசீந்திரன் தம்பி ஏ.நந்தகுமார் தயாரிக்கும் படம் வில் அம்பு. வழக்கு எண் படத்தில் நடித்த ஸ்ரீ, பொறியாளன் படத்தில் நடித்த கல்யாண் இருவரும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள்.

காடு படத்தில் நடித்த சமஸ்கிருதி, சாந்தினி, சிருஷ்டி டாங்கே என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். மார்டின் ஜோ ஒளிப்பதிவு செய்கிறார் நவீன் இசை அமைக்கிறார். "எந்த ஒரு சம்பவத்துக்கும் இரண்டு காரணிகள் இருக்கும்.

ஆனால் கண்ணுக்கு தெரியாத மூன்றாவது காரணி ஒன்றும் இருக்கும். சாலையில் ஒரு பஸ்சும் லாரியும் மோதி விபத்துக்குள்ளாவதாக வைத்துக் கொள்வோம். பஸ்சும், லாரியும் கண்ணுக்கு தெரிந்த காரணிகள் ஆனால் லாரிக்கும், பஸ்சுக்கும் இடையே சென்ற ஒரு பைக் ஓட்டுனர்தான் காரணம் என்பது தெரியாத மூன்றாவது காரணி.

இப்படித்தான் நம் வாழ்க்கையின் சில பிரச்னைகளுக்கு கண்ணுக்குத் தெரியாத மூன்றாவது காரணம் ஒன்று இருக்கிறது. அப்படிப்பட்ட மூன்றாவது காரணத்தை தேடி பயணப்படுகிற கதை.

படத்தின் நாயகர்களான ஸ்ரீயும், கல்யாணும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளவே மாட்டார்கள். ஆனால் ஒருவரால் மற்றவருக்கு தொடர்ந்து பிரச்னை வந்து கொண்டே இருக்கும். யார்டா அவன் என்று ஒருவரை ஓருவர் தேடிக் கொண்டிருப்பது மாதிரியான கதை" என்கிறார் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன்.


Post your comment





Related News
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
வில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்
ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் நெப்போலியன்
விஸ்வாசம் படத்தின் வில்லன் பற்றி கசிந்த சூப்பர் தகவல்.!
மாபெரும் வசூல் சாதனை படைத்த விஷாலின் வில்லன்.!
தீபாவளிக்கு ‘வில்லன்’ பொங்கலுக்கு ‘இரும்பு திரை’ விஷால் அறிவிப்பு
அஜித்திற்கு மேலும் ஒரு வில்லனா?
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions