வில் அம்பு படத்தின் சாட்சியாக ரசிகர்கள் இருப்பார்கள்: இயக்குனர் சொல்கிறார்

Bookmark and Share

வில் அம்பு படத்தின் சாட்சியாக ரசிகர்கள் இருப்பார்கள்: இயக்குனர் சொல்கிறார்

வழக்கு எண் ஸ்ரீ, பொறியாளன் ஹரீஷ் கல்யாண், சாந்தினி, சிருஷ்டி டாங்கே, சமஸ்கிருதி, சமுத்திரகனி நடிக்கும் படம் வில் அம்பு. இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்க அவரது உதவியாளர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கி உள்ளார்.

மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவு செய்துள்ளார், அரோரா இசை அமைத்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. படத்தை பற்றி இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் கூறியதாவது: இரண்டு இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை.

எந்த திரைப்படமாக இருந்தாலும் அந்த படத்திற்கான ரசிகர்களை வகைப்படுத்தி விடலாம். மால் தியேட்டர், மல்டி பிளக்ஸ் ஆடியன்ஸ். பி அண்ட் சி ஆடியன்ஸ் என்று பிரிக்கலாம். ஆனால் அப்படி எந்த பிரிவின் கீழும் வராத படம் வில் அம்பு.

படத்தின் கதையோட்டத்தில் ரசிகர்களும் கூடவே இருப்பார்கள். அதாவது திரைக்குள் இருப்பார்கள். படத்தின் சம்பவங்களுக்கு சாட்சிகளாக இருப்பார்கள். அப்படியான ஒரு வித்தியாசமான திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

வெறும் சினிமா பார்த்த உணர்வு மட்டுமல்லாது ஒரு நிகழ்வுக்குள் சென்று விட்டு வந்த மாதிரியான உணர்வை ரசிகர்கள் பெறுவார்கள் என்றார் ரமேஷ் சுப்பிரமணியம்.


Post your comment





Related News
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
விஸ்வாசம் படத்தின் வில்லன் பற்றி கசிந்த சூப்பர் தகவல்.!
மாபெரும் வசூல் சாதனை படைத்த விஷாலின் வில்லன்.!
அஜித்திற்கு மேலும் ஒரு வில்லனா?
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
சூர்யாவுடன் துணிந்து மோதும் கீர்த்தி சுரேஷ்!
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
வில் அம்பு பட வெற்றியினால் மேலும் திரையரங்குகள் அதிகரித்துள்ளனர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions