நண்பர்களுக்கு உதவி செய்யும் விமல்!

Bookmark and Share

நண்பர்களுக்கு உதவி செய்யும் விமல்!

ஆரவாரம் என்று எதுவும் இல்லாமல் அமைதியாக நடித்து வருபவர் விமல். அவர் நடித்த படங்களுக்கு ஒரு மினிமம் கியாரண்டி உள்ளது. அதோடு, ஜன்னல் ஓரம் உள்ளிட்ட சில படங்களுக்கு அவர் தனது சம்பளத்தில் பெரும்பங்கை விட்டுக்கொடுத்து நடித்ததால் தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாகவும் மாறி விட்டார்.

அதனால் அவரை வைத்து படம் தயாரிக்க பட்ஜெட் படஅதிபர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அப்படி தன்னால் அவர்களுக்கு கால்சீட் கொடுக்க முடியாதபோது, அவர்களின் படங்களில் நடிக்க தனது நட்பு வட்டார நடிகர்கள், டைரக்டர்களுக்கு சிபாரிசு செய்கிறார் விமல்.

இப்படி அவர் உதவி செய்யும் இயக்குனர்கள், நடிகர்களெல்லாம் அவர் சினிமாவில் நடிப்பதற்கு போராடி வந்த காலத்தில் அவருடன் நட்பாக இருந்தவர்களாம். வளர்ந்து விட்ட நடிகர்கள், தங்களது பழைய நண்பர்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் இந்த காலகட்டத்தில் எப்போது தன்னை அவர்கள் சந்திக்க வந்தாலும் அன்போடு அரவணைக்கும் விமல், இப்படி சினிமா வாய்ப்புகளுக்கும் கைகாட்டி விடுவதால், சினிமாவில் இந்த மாதிரி ஒரு நல்ல நண்பனை பார்ப்பது ரொம்ப அரிது என்று அவரது நண்பர்கள் விமலை பக்கம் பக்கமாக புகழந்து பேசி வருகிறார்கள்.


Post your comment





Related News
விமல், சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!
கிங் மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘கன்னி ராசி’
'மன்னர் வகையறா' வெற்றியை தொடர்ந்து விமலை தேடிவந்த 5 படங்கள்...!
களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்
த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்
‘மன்னர் வகையறா’ தமிழக ரைட்ஸை கைப்பற்றிய 'சினிமா சிட்டி'..!
விமலுடன் ஜூலி நடிக்கறது உண்மை தான், ஆனால் - வெளிவந்த ரகசியம்.!
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions