வருத்தத்தில் விமல்!

Bookmark and Share

வருத்தத்தில் விமல்!

விமல் சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை தயாரித்த எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், பின்னர் விமலை தனி ஹீரோவாக வைத்து தேசிங்குராஜா என்ற படத்தை தயாரித்தார். அதன் பிறகு, மாப்ள சிங்கம் என்ற படத்தையும் தயாரித்தார். மாப்ள சிங்கம் படம் ரெடியாகி கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கிடப்பில் கிடக்கிறது.

இதற்கிடையில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமலை ஹீரோவாக வைத்து மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டார். அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றநிலையில், தற்போது அந்தப் படத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டாராம் மதன்.

காரணம் என்ன.? பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்துள்ள மிரட்டு படத்தை தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கும் கொடி படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்!  இந்த படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிக்கிறார்.

இந்தப் படத்துடன் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தையும்  மதன் தயாரிக்கவிருக்கிறார்.  தனுஷ் நடிக்கும் இரண்டு படத்தையும் அடுத்தடுத்து தயாரிப்பதால் விமல் நடிக்க உள்ள படத்தை நிறுத்திவிட்டாராம் மதன். இதனால் விமல் வருத்தத்தில் இருப்பதாக அவரது வட்டாரத்தில் கூறப்படுகிறது.


Post your comment





Related News
விமல், சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!
கிங் மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘கன்னி ராசி’
'மன்னர் வகையறா' வெற்றியை தொடர்ந்து விமலை தேடிவந்த 5 படங்கள்...!
களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்
த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்
‘மன்னர் வகையறா’ தமிழக ரைட்ஸை கைப்பற்றிய 'சினிமா சிட்டி'..!
விமலுடன் ஜூலி நடிக்கறது உண்மை தான், ஆனால் - வெளிவந்த ரகசியம்.!
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions