அடக்கி வாசிக்கும் விமல்!

Bookmark and Share

அடக்கி வாசிக்கும் விமல்!

கலகலப்புக்கு பிறகு விமல்- அஞ்சலி ஜோடி சேர்ந்துள்ள படம் மாப்ள சிங்கம். இந்த படத்தில் சூரி முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார். அதாவது காமெடி வேடம் என்றபோதும் விமலுக்கு இணையான ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார்.

கதைப்படி, விமலும், சூரியும் பங்காளிகளாம். அதாவது விமலின் சித்தப்பா மகன்தான் சூரியாம். இருவருக்குள்ளும், சொத்து பிரச்சினை மட்டுமின்றி, முறைமாமன் மகளை யார் கைப்பற்றுவது என்ற சண்டையும் நடக்குமாம்.

அந்த வகையில், இதற்கு முன்பு கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா போன்ற படங்களில் நடித்ததை விடவும் இந்த படத்தில் பெரிய வேடமாம் சூரிக்கு. முக்கியமாக ஒரு காமெடியனுக்கு தனக்கு இணையான வேடம் கொடுக்கிறார்களே என்று நினைக்காமல், பட்டைய கிளப்பு பாண்டியா படத்தில் சூரிக்கு விட்டுக்கொடுத்து விதார்த் நடித்தது போன்று, இந்த படத்தில் விமலும் அவருக்கு விட்டுக்கொடுத்து நடிக்கிறாராம்.

அதாவது பல காட்சிகளில் விமல் பேசுவதைவிட சூரிதான் அதிகப்படியான டயலாக் பேசி நடிக்கிறாராம். சூரியின் மார்க்கெட் கருதி விமலும் அடக்கி வாசிக்கிறாராம்.


Post your comment





Related News
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!
கிங் மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘கன்னி ராசி’
'மன்னர் வகையறா' வெற்றியை தொடர்ந்து விமலை தேடிவந்த 5 படங்கள்...!
களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்
த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்
‘மன்னர் வகையறா’ தமிழக ரைட்ஸை கைப்பற்றிய 'சினிமா சிட்டி'..!
விமலுடன் ஜூலி நடிக்கறது உண்மை தான், ஆனால் - வெளிவந்த ரகசியம்.!
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?
சமூக பிரச்சனை மையமாக உள்ள படத்தில் நடிப்பது பெருமை: நிகிலா விமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions