நழுவி ஓடும் விமல்!

Bookmark and Share

நழுவி ஓடும் விமல்!

தேசிங்கு ராஜா படத்துக்கு பிறகு ஜன்னல் ஓரம், புலிவால் படங்கள் தோல்வியடைந்ததால் விமலின் மார்க்கெட்டில் தொய்வு நிலை ஏற்பட்டது. அதன்பிறகு மஞ்சப்பை அவரை காப்பாற்றியபோதும், அதையடுத்து வெளியான நேற்று இன்று, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்கள் அவரை ஏமாற்றின. அதோடு, ரெண்டாவது படமும் ரிலீசாகாமல் கிடக்கிறது.

இதுபோன்ற விசயங்களால் விமலின் மார்க்கெட் தள்ளாட்டத்திலேயே இருக்கிறது. அதனால் அவரால் மற்ற ஹீரோக்களை மாதிரி படத்துக்குப்படம் சம்பளத்தை உயர்த்த முடியவில்லை.

இருப்பினும், தற்போது தான் நடித்துள்ள அஞ்சல், மாப்ள சிங்கம் படங்களை ரொம்பவே எதிர்பார்க்கிறார் விமல். இந்த படங்கள் இரண்டுமே தனக்கு அடுத்தடுத்து ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கும் அவர், அதற்கடுத்தும் ஹிட் படங்களாக கொடுக்க வேண்டும் என்று நினைப்பதால் டைரக்டர் வேல்யூ கொண்ட படங்களாக தேடுகிறார்.

அதனால் யாராவது தயாரிப்பாளர்கள், புதுமுக டைரக்டர்களிடம் கதை கேட்டு வைத்துக்கொண்டு விமலிடம் கால்சீட் கேட்டால், அவர்களிடம் சிக்காமல் நழுவிக்கொண்டு வருகிறார். 


Post your comment





Related News
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!
கிங் மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘கன்னி ராசி’
'மன்னர் வகையறா' வெற்றியை தொடர்ந்து விமலை தேடிவந்த 5 படங்கள்...!
களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்
த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்
‘மன்னர் வகையறா’ தமிழக ரைட்ஸை கைப்பற்றிய 'சினிமா சிட்டி'..!
விமலுடன் ஜூலி நடிக்கறது உண்மை தான், ஆனால் - வெளிவந்த ரகசியம்.!
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?
சமூக பிரச்சனை மையமாக உள்ள படத்தில் நடிப்பது பெருமை: நிகிலா விமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions