காவல் படத்தை வெளியிட விமல் எடுக்கும் முயற்சி வெற்றி பெறுமா?

Bookmark and Share

காவல் படத்தை வெளியிட விமல் எடுக்கும் முயற்சி வெற்றி பெறுமா?

தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை நினைத்துப்பார்த்து அவர்களுக்கு உதவி செய்யும் ஹீரோக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இப்படிப்பட்ட நடிகர்களை பட்டியல் போட்டால் அதில் முதலிடம் விமலுக்குத்தான்.

அந்தளவுக்கு தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பற்றி அக்கறை எடுத்துக் கொள்வார். அவர் நடித்த ஜன்னலோரம் படத்தின் ரிலீஸ் அன்று, படம் வெளியாக முடியாத அளவுக்கு சிக்கல் ஏற்பட்டது.

அப்போது, தன் சம்பள பாக்கியை விட்டுக் கொடுத்ததோடு மட்டுமின்றி, மேற்கொண்டு 50 லட்சம் பணத்தைப் புரட்டிக் கொடுத்து அந்தப்படத்தை ரிலீஸ் பண்ண வைத்தார் விமல். இதுபோல் பல படங்களின் ரிலீஸ் நேரத்தில் உதவிகள் செய்தவர் அவர்.

தற்போது காவல் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விமல். அந்தப்படம் முடிவடைந்து வருடக்கணக்காகிறது. இன்னும் படம் பிசினஸ் ஆகவில்லை. மலேஷியாவைச் சேர்ந்த பெண் தயாரிப்பாளர் தயாரித்த படம்.

அந்தப் பெண்மணியே இந்தப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருப்பதால் அதுவே காவல் படத்துக்கு மைனஸாகிவிட்டது.

காவல் படத்தை ரிலீஸ் பண்ண முடியாத அளவுக்கு சிக்கல் ஏற்பட்டதால், தற்போது விமலை வைத்து  மாப்ள சிங்கம் படத்தை தயாரித்து வரும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனிடம் காவல் படத்தை ரிலீஸ் பண்ணிக்கொடுக்கும்படி கேட்டிருக்கிறார் விமல்.

விமலின் வேண்டுகோளை ஏற்று சம்மதித்துள்ள மதனும் காவல் படத்தை பார்ப்பதாக கூறி இருக்கிறாராம்.

 


Post your comment





Related News
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!
கிங் மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘கன்னி ராசி’
'மன்னர் வகையறா' வெற்றியை தொடர்ந்து விமலை தேடிவந்த 5 படங்கள்...!
களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்
த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்
‘மன்னர் வகையறா’ தமிழக ரைட்ஸை கைப்பற்றிய 'சினிமா சிட்டி'..!
விமலுடன் ஜூலி நடிக்கறது உண்மை தான், ஆனால் - வெளிவந்த ரகசியம்.!
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?
சமூக பிரச்சனை மையமாக உள்ள படத்தில் நடிப்பது பெருமை: நிகிலா விமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions