விமலின் அரசியல் படம்!

Bookmark and Share

விமலின் அரசியல் படம்!

தேசிங்கு ராஜா, மஞ்சப்பை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களை அடுத்து விமல் அருவா மீசை வைத்து நடித்து வரும் படம் மாப்ள சிங்கம். இந்த டைட்டிலுக்காகவே அவருக்கு சிங்கம் படத்தில் சூர்யா வைத்தது போன்ற மீசையை வைத்து விட்டுள்ளனர்.

அதனால் விமலும் மீசையை முறுக்கிக்கொண்டு நடித்துக்கொண்டிருக்கிறார். குறிப்பாக, தனது கலகலப்பு நாயகி அஞ்சலி இந்த படத்தில் ஜோடி சேர்ந்திருப்பதால், பல காட்சிகளில் அவரை தனது மீசையைக்காட்டியே பயமுறுத்திக்கொண்டும் திரிகிறாராம் விமல்.

அந்த வகையில், அவர்களது லவ் ட்ரேக்கை மதுரையிலுள்ள கிராமப்புறங்களில் கடந்த சில மாதங்களாக படமாக்கி வந்தவர்கள். இப்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவிற்குள் வந்திருக்கிறார்கள்.

காரணம், கிராமத்து லொகேசன்களில் படமாக்க வேண்டிய அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாம். மேலும்,.இந்த படம் கிராமத்து கதை என்றபோதும், அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சினையும் உள்ளதாம்.

அந்த காட்சிகளை இப்போதுதான் படமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். கரை வேஷ்டி கட்டிய ஒரு கோஷ்டி விமலை துரத்திக்கொண்டு திரியும் காட்சிகள் தற்போது படமாகி வருகிறது.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions